திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் மல்லியம்பத்து, மருதண்டகுறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், முடிகண்டம், மேக்குடி, கே.கள்ளிக்குடி
தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், பனையங்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, தாளக்குடி, மாடக்குடி, அப்பாதுரை, எசனைக்கோரை, மாதவப் பெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில், கூத்தூர் ஆகிய 25 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்கிடையே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்த்தப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சியை மாநகராட்சி ஒருங்கிணைக்க கூடாது இதற்கு ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் ஊராட்சியில் மாநகராட்சியோடு இணைக்க மாட்டோம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் மாநகராட்சியோடு இணைக்க மாட்டோம் என்ற வாக்குறுதி அளிக்க வேண்டுமென ஊர்மக்கள் தீர்மானம் நிறைவேற்றிய கையெழுத்திட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments