Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகை அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 669 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் நுகர்வோர் தேவைக்காக நாளொன்றுக்கு 1.60 இலட்சம் லிட்டர் பால் உள்ளுர் விற்பனையும், சென்னை பெருநகர தேவைக்கு நாளொன்றுக்கு 3 இலட்சம் லிட்டர் பால் விற்பனைக்கெனவும், மீதமுள்ள பாலில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் முழுவதும் விற்பனை மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது.

தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று பிறப்பு காலம் ஆகியவற்றின் காரணமாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகள் இயல்பு நிலையினை விட தற்போதைய பருவநிலையின் போது பால் அளவில் சிறிது குறைவு ஏற்படும். இதனால் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுகட்டவும்.

பால் உற்பத்தியினை அதிகரித்திடவும், கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாவில் எவ்வித குறைவும் ஏற்படாமல் சங்கங்களின் பால் கொள்முதலை ஒரே சீராக பராமரித்திடவும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கும் பாலிற்கு ஏற்கனவே லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையோடு மார்ச் 2026 மற்றும் ஏப்ரல் 20126 ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டும் மேலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

எனவே, பால் உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாங்கள் பால் வழங்கும் சங்கத்திற்கு தொடர்ந்து பால் வழங்கி பயனடைய வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *