திருச்சியில் ஆதிதிராவிட மாணவிகள் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இதில் பள்ளி கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.மூன்று விடுதிகள் மாணவிகளுக்கு அமைந்துள்ளது இதில் போதுமான இட வசதி இல்லாததால்
மாணவர்கள் தங்குவதற்கும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 100 பேர் தங்குமிடத்தில் 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்குவதால் இரவில் தூங்குவதற்கும் மற்ற எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.மேலும் கழிப்பறை வசதியும் குளியலறை வசதியும் மாணவ மாணவர்களுக்கு போதுமான அளவில் இல்லை. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் போது மிகுந்த நெருக்கடியும் ஏற்படுகிறது
என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக இரவு நேரத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி கூறினார்கள் ஆனால் அதிகாரிகளுக்கும் மாணவிகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்த பொழுது எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments