திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்
பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்
சட்டம் 2009-ன்படி, 2021-2022 ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25 சதவிகிதம் இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கைக்கான இணைய தளத்தில் 05.07.2021 முதல் 13.08.2021 வரை 306 பள்ளிகளுக்கு 2453 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில் 132 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள், பள்ளி முதல்வர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின்
முன்னிலையில் 19.08.2021 அன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் தெரிவு செய்து சேர்க்கை நடைபெறும்.

குலுக்கலில் பங்கேற்கும் பெற்றோர்கள் போதுமான சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments