திருச்சி அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சிபெற்ற அகோரி குருவான மணிகண்டன் பூஜைகள்செய்து நிர்வகித்துவருகிறார்.
இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேசகாலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றது.
கடந்த 22ம் தேதி நவராத்திரிவிழா தொடங்கியதுமுதல் தினசரி ஜெய் அகோரகாளி கோவிலில் நவராத்திரி பூஜைகள் நடந்துவந்தது.
நவராத்திரி விழாவின் 10ம் நாளான இன்று நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடல்முழுவதும் திருநீறு மற்றும் சாம்பலை பூசிகொண்டு சிறப்புயாகபூஜை நடத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற மகாருத்ராயாகத்தின்போது அகோரிகள் தலைகீழாக நின்று தியானம் செய்ததுடன், அகோரிகுருவான மணிகண்டன், ருத்ராட்சமாலைகளை உருட்டியபடி, மந்திரங்களை ஜெபித்து, நவதானியங்கள் பழவகைகள், ஆடு கோழிகளை பலியிட்டு அதன்மாமிசம் உள்ளிட்டபொருட்களை மண்டை ஒடுகளை சுற்றிலும் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில்இட்டு மகாயாகபூஜைசெய்தார்.
ஜெய்அகோரகாளி, ஜெய்அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவாரதெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடந்தது.
இந்த யாகபூஜையின்போது சகஅகோரிகள் யாவரும் டம்ராமேளம் அடித்தும்,சங்குநாதங்கள்முழங்கியும், மந்திரங்களை ஓதினர். இதில் அகோரிகள், பெண்அகோரிகள் மற்றும் தமிழகம் மற்றும் வடமாநிலபக்தர்கள் திரளாககலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments