Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அதிமுகவில் தலைமை தேர்ந்தெடுக்க தேர்தல் – திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி 

திருச்சியில் தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்….
பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரித்த நிலையில் தற்போது அ.தி.மு.க வில் தலைமை,பொறுப்பாளர்கள்  என்பதே இல்லை. அனைவரும் தொண்டர்கள் மட்டுமே என குறிப்பிட்டார்.அ.தி.மு.க ஜாதி வாரியாக பிளந்து விட கூடாது என்கிற அச்சம் உள்ளது.மூத்த உறுப்பினர் என்ற முறையில் கண்ணீர் வடிக்கிறேன் என தெரிவித்தார்.

ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்.அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிரோடிருந்தால், தற்போதைய அதிமுகவின் நிலையை கண்டு கண்ணீர் வடிப்பர்.இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர்.

அ.தி.மு.க விற்குள் எந்த கட்சியும் நுழைந்து தலையிட முடியாது.
ஜெயக்குமார் வாயை மூடிகொண்டு இருக்கவேண்டும்.இ.பி.எஸ்.ஓ.பி.எஸ் ,சாதாரண தொண்டான் யார் வேண்டுமானலும் கூட கட்சி தலைமைக்கு தேர்ந்தெடுக்கபட வேண்டும்.
எம்.ஜி.ஆர் உயில்படி அ.தி.மு.க வின் தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க முடியும். 80 சதவீத தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் தலைமைக்கு வர வேண்டும் என 1984 எம்.ஜி.ஆர் தன் உயிலில் கூறி உள்ளார். இது பின்பற்றப்படவில்லையென்றால் நீதிமன்றத்தை தேவைப்பட்டால் நாடுவேன் என்றார்.

நான் யாருக்கும் ஆதரவு இல்லை.அதிமுகவில் சில நாற்றாங்கள் உள்ளது.அதிமுக தோற்றுவித்த உண்மையான தொண்டானாக தலைவராக இருந்தவர் எம்.ஜி.ஆர் முதல் கட்சியில் பணியாற்றியவன்.தற்போது தொண்டர்கள் மட்டுமே உண்மையானவர்கள் ஜெ.ஜா அணி உருவான போதே அதிமுகவிற்க்கு பாடுபட்டவன் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *