திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் (கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில்) வார காய்கனி சந்தையில் 7 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் 58 கடைகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டு வேலையை அதிமுக முதுநிலை ஒப்பந்தக்காரர் ஆனந்தன் என்பவர் எடுத்து கட்டிட வேலைகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கட்டிடம் கட்டடப்பட்டு வரும் இடத்தினை என்ஜீனியர், ஒவர்சியர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்,
இந் நிலையில் கட்டிட வேலையில் குறைகள் இருப்பதாகவும், அந்த இடத்தினை மாற்றி அமைக்க கூறிய ஒவர்சியர் ராஜேஸ்குமார் வேலை நடக்கும் இடத்திற்கு சென்று பணியை மாற்றி அமைக்க கூறினார்.
‘
அப்போது அங்கு வந்த ஒப்பந்தக்காரர் ஆனந்தன் நகராட்சி ஒவர்சியர் ராஜேஸ்குமாரை ( blue சட்டை கண்ணாடி அணிந்து இருப்பவரை ) அரை கை வெள்ளை சட்டை அணிந்தவர் )தகாத வார்த்தைகளாலும், கெட்ட வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவர்சியர் ஆணையருக்கு புகார் மனு அளித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments