Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி – நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிக்கையாளர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்!!

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவித்தனர்.

திருச்சி அதிமுக மாவட்ட மாநகர் செயல்வீரர்கள் கூட்டம் டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்றது. மாநகர் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பல இடங்களில் பிளக்ஸ் வைத்ததால் பொது மக்கள் முகம் சுளித்தனர். இந்நிலையில் டிவிஎஸ் டோல்கேடில் தனியார் மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை ஏற்று நடத்தினார்.

Advertisement

இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஒரு பிரிவினர் சலசலப்புடன் வெளியேறி சென்றனர், அப்போது செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர் ஒருவர் அதனை படம் பிடிக்கும் போது அதிமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஒருமையில் பேசி தாக்கினார். மேலும் எடுத்த வீடியோவை உடனடியாக செல்போனில் இருந்து அழிக்க சொல்லி மிரட்டி உள்ளார், முடியாது என செய்தியாளர் மறுத்தும் செல்போனை பிடிங்கி வீடியோவை அழித்து உள்ளனர்.

தான் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் என்று கூறியும் தாக்குதல் நடத்தி தகாத வார்த்தையால் உன்னால் என்ன செய்ய முடியும் என்று வாக்கு வாதம் செய்துள்ளனர், மேலும் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு உள்ளே வந்து செய்தியாளர்களை மிரட்டியுள்ளனர். அமைச்சருக்கு முன்னிலையில், தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பத்திரிக்கையாளரை தாக்கிய சம்பவம் திருச்சி பத்திரிக்கையாளர்களுக்கு மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

Advertisement

இதுகுறித்து திருச்சி மாவட்ட செய்தியாளர்கள் ஒன்றிணைந்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

  1. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *