முசிரி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!

முசிரி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி!

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement

முசிரி தொகுதி எம்எல்ஏ செல்வராசு கொரோனா அறிகுறி காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசிரி தொகுதி சட்டமன்றஉறுப்பினராக பதவி வகிப்பவர் செல்வராசு.

அதிமுக கட்சியை சேர்ந்த இவர் சில தினங்களாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிக்காக கட்சித் தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். இந்நிலையில் அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்காக எம்எல்ஏ செல்வராசுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement

இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டதையடுத்து எம்எல்ஏ செல்வராஜ் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .இச்சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் ,நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.