திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை அந்தநல்லூர் வடக்கு ஒன்றியத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
முதலில் கம்பரசம்பேட்டை பகுதியில் தொடங்கிய தேர்தல் பிரசாரனமானது,
முத்தரசநல்லூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.


அப்போது அதிமுகவின் வெற்றி பற்றி பட்டியலிட்டார்.மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விட்டுச் சென்ற பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து மக்களுக்காக செய்து வருகிறார்.அதிமுக அரசு மக்களுக்கு வசந்தகாலத்தை கொடுத்துள்ளது. அதனைதொடர்ந்து ஒன்றியத்திற்குட்பட்ட ,அல்லூர்.திருச்செந்துறைஜீயபுரம்கடைவீதி,பெரியகருப்பூர்,சின்னகருப்பூர்,மேக்குடிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.


அதனை தொடர்ந்துமணப்பாறை பகுதியில் பேசுகையில்,இந்திய துணை கண்டத்தில் எதிரிகள் எங்கு இருந்தாலும் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களை வேரறுக்க வேண்டும் என்று கூறி,
வடுகபட்டி, தொப்பம்பட்டி , ஆளிபட்டி, நடுப்பட்டி, பூங்குடிப்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தாமாகா கணேசன் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன், கோபால், செல்வராஜ் சுப்பிரமணி, சதீஷ்குமார் பாரதிய ஜனதா கட்சி கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81






Comments