Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அதிமுக சார்பில் தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சார கூட்டம்

 திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் கொடியம்பாளையத்தில் அதிமுக கட்சியின் சார்பாக தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.

தொட்டியம் அருகே கொடியம்பாளையம் மற்றும் வானப்பட்டறை மைதானத்தில் நடைபெற்ற தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சார கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பிரகாசவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, அண்ணாவி, பூனாச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராஜ், மல்லிகா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இதனை தொடர்ந்து சென்னை நவரசம் பன்னீர் இன்னிசை குழுவினரின் தெருமுனை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், குறைகளை கூறியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்வில் தொட்டியம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தோளூர் பட்டி காமலாபுரம் அரங்கூர் அப்பநல்லூர் கொளக்குடி அழகரை முள்ளுபாடி மணமேடு சீனிவாசநல்லூர் அரசலூர் புத்தூர் நத்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி புறநகர் மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஏலூர் பட்டி மில்க் சரவணன் எம் ஏ எல் முதலிப்பட்டி முருகன் தொட்டியம் நகர செயலாளர் திருஞானம்,

காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே ஆர் ராமச்சந்திரன் மேற்கு ஒன்றிய அமைத்தலைவர் பழனிவேலன் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஐயப்பன் சோபனா ராஜேந்திரன் தொட்டியம் ஒன்றிய அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் பெ.ஆறுமுகம் மற்றும் பேரூராட்சி 15 வார்டு கழக செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *