தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க உதவியுடன் (TANSACS) மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு (DAPCU) மேற்பார்வையில் மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) ஒருகிங்னைப்பில் இன்று காலை (06.09.2025) சுமார் 11 மணியளவில் சமயபுரம் பகுதியில் தீவிர விழிப்புணர்வு முகாம் (Intensive IEC Campaign 2025) நடைபெற்றது.
நிகழ்ச்சியினை திரு.ப.சரவணன். தலைவர் சமயபுரம் கண்ணனூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் அவர்கள் முன்னிலையில் திருமிகு.விமல்ஆரோக்கியமேரி மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு அவர்களுடன் திருமிகு.புஷ்பலதா ICTC மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திருச்சிராப்பள்ளி மேற்பார்வையில் சமயபுரம் கண்ணனூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துப்புரவு பணியாளர்கள், காவல்துறை பணியாளர்கள், ஆட்டோ&டாக்ஸி ஓட்டுனர்கள், அதிக ஆபத்துடைய இலக்கு நபர்கள், பூக்கடை. தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு இலவசமாக ரத்த கொதிப்பு அளவு, சர்க்கரை அளவு, எச்.ஐ.வி, வீ.டீ.ஆர்.எல், மஞ்சள் காமாலை மற்றும் காச நோய் பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பரிசோதனை செய்ய திருமிகு.கோமதி ஆலோசகர் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனை. திரு.பாபு ஆலோசகர் ஓமந்தூர் அரசு மருத்துவமனை. திருமிகு.உதயா ஆலோசகர் சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை.அவர்களுடன் ஆய்வக நுட்புனர்கள், நடமாடும் HIV பரிசோதனை வாகன ஊர்தி ஆலோசகர் மற்றும் பணியாளர்கள், காச நோய் தடுப்பு திட்ட பணியாளர்கள் மக்கள் மேம்பாட்டு வினையக பணியாளர்கள், மற்றும் நிலா டிரஸ்ட் LWS பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை திருமிகு.முத்துகுமார் திட்ட மேலாளர்.(PDI) அவர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments