Advertisement
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்பு குழுவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
அந்த வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பாளரான ஜோசப் அனினியோ ஆண்டனி தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், தலைமை காவலர் மணிமாறன் ஆகியோர் வயலூர் ரோடு மல்லிகை பத்து கிராமத்தில் நள்ளிரவு 2 மணிக்கு வாகனத்தில் ரோந்து சென்றபோது நடுரோட்டில்
கன்றீனும் நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. கன்று வெகுநேரமாக பிரசவிக்கபடாததால் என்ன செய்வதென்று? அறியாமல் கால்நடை துறைக்கு தகவல் தெரிவித்த உரிமையாளர்கள் வேதனையில் நின்றுகொண்டிருந்தனர்.
இதனைக் கண்ட ஜோசப் அனினியோ குழுவினர் பெண் கன்றை வெளியே எடுத்து பசுவையும், கன்றையும் காப்பாற்றினர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் பசு உரிமையாளர்கள் அதிகாரிகளுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்.
பசுவையும் கன்றையும் காப்பாற்றிய மூவரும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதால் சிறுவயதிலேயேபசு கன்றீனும் சமயத்தில் எவ்வாறு செயல்படுவது? என்பது குறித்த அடிப்படை ஞானம் பெற்றவர்கள் என்பதால் பசுவையும் கன்றையும் நலமுடன் காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments