திருச்சியில் விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.45 மணிக்கு சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுதளத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது இந்த விமானத்தில் 176 பயணிகள் உள்ளனர்.
சிறு குழந்தைகள் வயதானவர்கள் அனைவரும் விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டு தவித்து வருகின்றனர். இதுவரை விமானம் புறப்படாததால் பயணிகள் அனைவரும் அவதியுற்று வருகின்றனர்.
விமான பணிப்பெண்கள் விமானிகள் உடன் 180 பேரும் விமானத்தின் உள்ளேயே இரண்டு மணி நேரமாக அமர்ந்துள்ளனர் தூக்கத்தை தொலைத்து பயத்துடன் குடிநீர் இன்றி பயணிகள் விமானத்திற்கு உள்ளே இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்
விமானம் எப்பொழுது சரி செய்யப்பட்டு மீண்டும் புறப்படும் சார்ஜாவில் இறங்கும் வரை எங்களுக்கு நிம்மதி இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments