ஏ ஐ டி யூ சி-மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பாக ஆக 5 மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
மின்சார பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளை தனி யாரிடம் ஒப்படைத்துள்ளதை மாற்றி அரசு ஏற்று நடத்த வேண்டும்,தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜூலை 2023 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 25 மாத கால பல பணப் பலன்களை வழங்கிட வேண்டும், முப்பதாயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், உயிரிழந்த
தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்,மேல்முறையீட்டு மனுக்கள் மீது பாரபட்சம் இன்றி தண்டனைகளை குறைத்திடவேண்டும்,ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச பென்சனை உயர்த்தியும், DAஉயர்வை வழங்கியுயம்,மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர்T. V. செல்வராஜ்,தலைமையில் நடைபெற்றது.
M. சுந்தர்ராஜ்,மண்டல பொதுச்செயலாளர்,
G. கார்த்திகேயன் பொருளாளர் மற்றும்
க. சுரேஷ்,AITUC, மாவட்ட பொதுச் செயலாளர்,K. நேருதுரை, போக்குவரத்து சம்மேளன மாநில பொருளாளர்,நடராஜா,
AITUCமாவட்ட தலைவர்,G. ராமராஜ்
வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உரையாற்றினர். திரளானதொழிலாளர்கள்
பங்கேற்றனர்.
Comments