இன்று “குட் பேட் அக்லி ” நடிகர் அஜித்குமார் நடித்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது திருச்சியில் அஜித் ரசிகர்கள் திரைப்படத்தை வெடி வெடித்தும் ஆடியும் பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அப்பொழுது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து போலீஸ் காலனிக்கு பேருந்து பிரபாத் ரவுண்டானா அருகே அரசு நகர பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்துக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் பேருந்துக்கு வழி விடாமல் நடு ரோட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்
அரசு பஸ் நடத்தினருக்கும் வழிவிட சொல்லி கேட்டபோது மூன்று இளைஞர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அந்த இளைஞர்கள் நடத்துனர் கிருஷணனை தாக்கியதில் தாடையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தது .
அருகில் இருந்த பொதுமக்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரண்டு இளைஞர்களை பிடித்து இருசக்கர வாகனத்தையும் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments