Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

உய்யகொண்டான் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.

தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இனைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான குடல் இரைப்பை உள்நோக்கி கருவிகளை மருத்துவ சிகிச்சை பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தனர்.

அதே போல் 53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்டினை மருத்துவ பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். மேலும் தனியார் நிறுவனம் சார்பில் ( Capgemini) வழங்கப்பட்ட 25 ஆக்சிசன் கான்சன்ட்ரேட்டர்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில்.. திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்கப்படுமா என்ற கேள்விக்கு, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் மாவட்டமாக திருச்சியை மாற்றுவதற்கான அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டித் தருதல், சாலைகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தல் போன்ற பணிகளுக்கான திட்டங்களை முதலமைச்சரினன் பார்வைக்கு கொண்டு சென்று விரைவில் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.

சென்னை – கோவை – மதுரை என்பதை திருச்சி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு சென்னை, திருச்சி மதுரை கோவை என்று மாற்றும் அளவிற்கு விரைவில் சிறந்த ஒரு மாவட்டமாக திருச்சி மாற்றி அமைக்கப்படும். புதிய சாலை திட்டங்களும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. பெரு நகரங்களில் இருப்பது போல மேம்பாலங்கள் அமைப்பதற்கான பணிகளும் பரிசீலனையில் இருக்கின்றது.

உய்யகொண்டான் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் மூலம் கால்வாய்  நீரை மக்கள் பயன்படுத்தும் வகையில் பணிகள் நடைபெறுகின்றது என தெரிவித்தார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *