திருச்சி அருகே 13 ஏரிகளை மண்ணைக் கொட்டி அழித்து நெடுஞ்சாலை போடப்பட்டதாக குற்றச்சாட்டு - வட்டாட்சியர் நேரில் ஆய்வு!!

திருச்சி அருகே 13 ஏரிகளை மண்ணைக் கொட்டி அழித்து நெடுஞ்சாலை போடப்பட்டதாக குற்றச்சாட்டு - வட்டாட்சியர் நேரில் ஆய்வு!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி முதல் ஜீயபுரம் வரை அரை சுற்று வட்டசாலைபோடுவதில் 13 ஏரிகளை மண்ணை கொட்டி அழித்து நெடுஞ்சாலை போட்டுள்ளனதாக குற்றசாட்டு - வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Advertisement

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னதுரை மற்றும் மக்கள் அதிகாரம் பொதுநல அமைப்புகள் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் விஸ்வநாதன் தலைமையில் ஏரிகளை அழித்தது பற்றி இன்று ஆய்வு செய்து வருகின்றனர் .காலை 10 மணிக்கு துவங்கிய இந்த ஆய்வு அதிகாரிகள் திருவரம்பூர் தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள், வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு பணிகளை செய்து வருகின்றனர் . அரை சுற்று வட்ட சாலை பணியில் பதினேழு ஏரிகளை அழிப்பதாக குற்றச்சாட்டினார். இதை கண்டித்து உண்ணாநிலைப் போராட்டத்தை அறிவித்து போராட்டம் நடத்தினார். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில் இந்த பணிகள் நிறுத்தப்படும் என வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது .அதன் பிறகு தொடர்ந்து பணிகள் நடைபெற்றதாக தொடர்ந்து விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டை ஆட்சியரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருவரம்பூர் வட்டாட்சியர் ஞானாமிர்தம்


இன்று (07.10.2020)ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார். துவாக்குடி - சூரியூர் பகுதியில் புதுக்கோட்டை சாலை வரை அரை சுற்று வட்ட சாலை பணிகள் முடிவடைந்து விட்டது. அடுத்தகட்டமாக புதுக்கோட்டை சாலையில் இருந்து மதுரை சாலை பஞ்சப்பூர் வரை பணிகள் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் தற்போது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த அரை சுற்று வட்ட சாலை மொத்தம் 43 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement