Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“திமுக வேட்பாளருக்காக கூட்டணி கட்சியினரும் உழைக்க வேண்டும்” – அமைச்சர் கே.என்.நேரு

திமுக வேட்பாளருக்கு வேலை செய்வது போல் கூட்டணி கட்சியினருக்கு தேர்தல் பணியாற்ற அமைச்சர் நேரு வேண்டுகோள்

திருச்சி திமுக மத்திய மாவட்டம் சார்பாக BSNL அருகே ‌ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு vs NDA “தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை, அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர்ம் இல்லை என்ற முழக்கத்துடன் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் -ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

நான்காண்டு காலமாக முதலமைச்சர் ஆக இருந்த எடப்பாடி முதல்வர் கேஸ் தட்டுப்பாட்டில் தலையிட்டு தீர்க்க வேண்டும் என கூறுகிறார்.

ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கேஸ் துறையில் மாநில அரசு செய்து தர சொல்லி கேட்டுக்கொள்ள தான் முடியும். தேர்தல் நேரம் என்ற காரணத்தால் முதல்வரை குறை சொல்லி பேசுகிறார் தினம் தோறும் காலையும் மாலையும் கூட்டணி குறித்து பேசுகிறார்கள்.

மக்கள் மீது அக்கறை இருந்தால் எரிவாயு வேண்டும் என கேட்கலாம்.
இந்நிலையில் மாநில முதல்வர் உடனே கூட்டம் கூட்டி எரிவாயு இல்லை என்று மின்சாரம் அடுப்பு உபயோகித்தால் இரண்டு ரூபாய் மானியம் வழங்குகிறார்.

அதிமுகவிற்கு மக்கள் மீது அக்கறை இல்லை எப்படியாவது திமுகவை விரட்டிவிட்டு அவர்கள் வரவேண்டும் என நினைக்கிறார்கள் அது எப்போதும் நடக்கப்போவதில்லை. மீண்டும் 200 தொகுதி வெற்றி பெற்று ஸ்டாலின் தான் வருவார்.

கூட்டணி கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கி செய்தாலும் திமுகவுக்கு எப்படி வேலை செய்வோமோ அதைவிட கூடுதலாக வேலை செய்து வெற்றி பெற வைப்போம் என கூறினார்

தேர்தல் இன்று மாலை அறிவிக்க இருக்கிறார்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து 40 நாட்களுக்கு தூக்கமின்றி பணியை செய்வோம் என கூறினார்

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிக்கு 35 ஆயிரம் கோடி பணிகள் செய்துள்ளனர் பல பேருக்கு பட்டா வழங்கியுள்ளனர் பல்வேறு திட்டங்கள் வழங்கி உள்ளார் இதை கூறி வாக்கு கேட்கலாம்

ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு நெருக்கடி கொண்டிருக்கிறது ஜல் ஜீவன் திட்டத்திற்கு, கல்விக்கு நிதி தரவில்லை கல்விக்கு நிதி கேட்டால் மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள கூறுகிறார்கள் அந்தக் கொள்கையை தேவையில்லை இரு மொழி கொள்கையை போதும் என முதலமைச்சர் கூறியுள்ளார்

இந்த ஆட்சியை வீழ்த்துவதற்காக எட்டப்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வருகிறார்கள் தேர்தல் நேரத்தில் சில நலத்திட்டங்களை அறிவித்து செல்கிறார்கள்

ஸ்டாலின் அறிவித்த 1000 ரூபாய் தர முடியாது என கூறிய எடப்பாடி 2000 தருகிறேன் என கூறுகிறார் தேர்தல் என்பதால் இப்படி கூறுகிறார்கள். ஆனால் ஸ்டாலின் கூறிய திட்டங்களை செய்து காட்டினார் எனவே ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என கூறினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *