மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா திருச்சி வருகை புரிந்தார். இதற்காக அந்தமானில் இருந்து தனி விமானம் மூலமாக திருச்சிக்கு தற்போது வந்தடைந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிளார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள தமிழக தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரப் பயணத்தில் நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்தமானில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு தற்போது வருகை புரிந்தார்.
முன்னதாக திருச்சி வந்த அமித்ஷாவை பியூஸ் கோயல் , மத்திய இணை அமைச்சர்கம் முரளிதர் மோஹோல், எல்.முருகன் , பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சுதாகர் ரெட்டி, ஏ பி முருகானந்தம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி சி விஜயபாஸ்கர் பரஞ்சோதி காமராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று சாலை மார்க்கமாக திருச்சி வருகிறார்.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் இன்று இரவு தங்குகிறார்.
இன்று இரவு நட்சத்திர தனியார் சொகுசு விடுதியில் பாஜக மையக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தமிழக அரசியலின் தற்போதைய நிலை,
தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2 ஆம் நாளான நாளை திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதைத்தொடர்ந்து, மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார். பிற்பகல் 1.20 மணிக்கு கார் மூலமாக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று டெல்லிக்கு புறப்படவுள்ளார். அமித்ஷா வருகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, மாவட்டங்கள் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி, விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments