பொங்கல் விழாவில் அமித் ஷா வருகை – மேடைக்கு அருகே நிறுத்த அனுமதி மறுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்
திருச்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் விழா மேடையில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், போலீசார் அதற்கு அனுமதி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் விழாவிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்வையிடும் வகையில், மேடையின் இடது புறத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்கள் கொண்டு வந்து நிறுத்த ஏற்பாடு செய்தனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, மேடை அருகே காளை மாடுகளை நிறுத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என போலீசார் தெரிவித்தனர்.
இதனால் மேடைக்கு அருகே கொண்டு வரப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்கள், விழா நடைபெறும் இடத்திற்கு வெளியே சாலையோரம் அழைத்து சென்று, காரில் வருகை தரும் அமித் ஷா பார்வையிடும் வகையில் நிறுத்தி வைத்தனர்.
அதே நேரத்தில், மேடை அருகே வெள்ளை நிற பசு மாடு கன்றுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments