அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மூன்றாம் ஆண்டு டிடிவி சுழற்கோப்பைக்கா கிரிக்கெட்போட்டி, திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் இன்று தொடங்கியது.
அமமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், உத்வேகத்தை அளிக்கும் விதமாக நடத்தப்படும் இப்போட்டியில் 7அணிகள் பங்கேற்றுள்ளது.
ஆறு ஓவர் போட்டிகளாக நடைபெறும் இப்போட்டியினை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் கிரிக்கெட் விளையாடி தொடங்கிவைத்தார்.
போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பவுலருக்கு கோப்பை வழங்கப்பட உள்ளது மேலும் முதலிடம் பிடிக்கும் அணி வீரர்கள் அனைவரும் இரண்டு நாள் கொடைக்கானல் சுற்றுலா செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments