தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி துணை மேலாளர் (பணியாளர்) ஆர். இராமநாதன் அவர்கள் முன்னிலையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி இன்று 18.11.2025 எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன் (வழிவசூல் தாள்) புகழேந்தி ராஜ்( தொழில்நுட்பம்)
மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, திருச்சிராப்பள்ளி
போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி: எந்தவொரு நாட்டின் சக்தியும் இளைஞர்களின் சக்தியாகும். மேலும், சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் சக்தி முக்கிய பங்களிப்பை வழங்குகிறது. எனவே. போதைப்பொருள் இல்லாத இந்தியா பிரச்சாரத்தில் அதிகபட்ச இளைஞர்கள் சேருவது மிகவும் முக்கியம். நாட்டின் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு இன்று நாம் நாஷா முக்த் பாரத் அபியானின் கீழ் ஒன்றுபட்டு, சமூகம், குடும்பம், நண்பர்கள் மட்டுமல்லாது நாமும் போதைப்பொருள் இல்லாதவர்களாக இருப்போம் என்று உறுதிமொழி எடுக்கிறோம். ஏனெனில் மாற்றம் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும்.
எனவே, நமது மாவட்டம் மாநிலத்தை போதைப்பொருள் இல்லாததாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து உறுதியான எனது எடுப்போம். நாட்டை முடிவை போதைப்பொருள் இல்லாததாக மாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று நான் உளமாற உறுதியளிக்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments