திருச்சியில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது .இந்நிலையில் இன்று கத்தரி வெயிலின் முதல் நாளில் 103.8 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது. பகலில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவித்தனர். மாலையில் மேகமூட்டத்துடன் பலத்த சூறாவளி காற்று அடித்தது .பின்பு திருச்சி மாநகர் பகுதிகளான கண்டோனமென்ட், ரயில்வே ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம், உறையூர், சிங்காரத்தோப்பு, மேலப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து இம்மழையினால்  வெப்பம் தனிந்தது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரம் திட்டத்தில் போடப்பட்டிருந்த நடைபாதைகள், சாலைகள் என இரண்டும்  மழைநீர் தேங்கி ஒன்றாக காட்சியளித்தது.
ஒத்தக்கடை, உறையூர் மேலப்புதூர், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மழை நின்ற பிறகும் நீர் வடியாமல் சாலையிலேயே தேங்கியிருந்தது.மழை பெய்த பொழுது ஒரு மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது. நாளை பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் படிப்பதற்கு பெரும் சிரமம் பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments