புதிய வேளாண் மசோதா சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அன்பில் மகேஷ் வயலில் இறங்கி போராட்டம்!!


புதிய வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி பால்பண்ணை அருகே வயல்வெளியில் இறங்கி திமுக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று புதிய வேளாண் மசோதா சட்டங்களை நிறைவேற்ற மத்திய மற்றும் அதிமுக அரசை கண்டித்து திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வயல்வெளிகளை சுற்றி நின்று புதிய வேளாண் மசோதா திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் சார்ந்த பலர் வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி… புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதா விவசாயிகளை மிகவும் வஞ்சிப்தாகவும், இதனை உடனே ரத்து செய்து விவசாயிகளை காக்க வேண்டும். இளைஞர்கள் ஒன்றிணைந்து விவசாயிகளுக்காக திருச்சி முழுவதும் சுமார் 15க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார். என்றார்
