வயலில் இறங்கி போராடிய அன்பில் மகேஷ் - சகதிக்குள் சிக்கிய ஒளிப்பதிவாளர்!!

வயலில் இறங்கி போராடிய அன்பில் மகேஷ் - சகதிக்குள் சிக்கிய ஒளிப்பதிவாளர்!!

புதிய வேளாண் மசோதா திட்டங்களை அமல்படுத்திய மத்திய அரசு மற்றும் அதிமுக அரசை கண்டித்து திருச்சி திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பழைய பால்பண்ணை அருகே வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி புதிய வேளாண் மசோதா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இக்காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய வந்திருந்த தனியார் ஸ்டுடியோ ஒளிப்பதிவாளர் திடீரென கால் தடுமாறி வயலில் இருந்த சகதிக்குள் சிக்கினார். இடுப்பளவு சகதிக்குள் சென்ற அவரை அங்கிருந்த இளைஞர்கள் மீட்டனர். தலை நெற்றியில் காயமும் ஏற்பட்டது. பின்பு அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement