திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதூர் பாளையம் பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட வானத்திரையான் பாளையம் கிராமத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக பொது கழிப்பிடம் கட்டுவதற்காக குழி தோண்டிய போது 4 அடி ஆழத்தில் ஒரு கற்சிலை இருப்பதை அறிந்து தொழிலாளர்கள் அதனை பத்திரமாக மீட்டு எடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று கற்சிலையை மீட்டார் இச்சிலை 2 1/2 அடி உயரமும், 1/2 அடி அகலமும் உடைய பெண் தெய்வ சிலையாகும். மேலும் அதே பகுதியில் வேறு கற்சிலைகள் ஏதும் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்தனர்.

ஆனால் எந்தவித சிலைகளும் கிடைக்காததை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் பெண் தெய்வ கற்சிலையை மீட்டு லால்குடி வட்டாட்சியர் முருகன் வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் சிலையை பத்திரமாக ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தொல்பொருள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர். மேலும் இச்சிலை ஆய்விற்குப் பிறகு எந்த நூற்றாண்டை சேர்ந்தது எந்தப் பெண் தெய்வத்தை சார்ந்தது தெரியவரும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments