தெரு நாய்களால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், விலங்கின ஆர்வலர்கள் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று விலங்கு நல ஆர்வலர்கள் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரே தெருநாய்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும்
அவற்றை காப்பகங்களில் அடைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யலாம் ஆனால் அவற்றை காப்பகங்களில் அடைக்கக் கூடாது, அவ்வாறு அடைத்தால் தெரு நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு அவை உயிரிழக்கநேரிடும். கலப்பின நாய்களை எடுத்து வளர்க்கும் மக்கள் நாட்டு நாய்களையும் வளர்த்தால் நாட்டு நாய்களை காப்பாற்றமுடியும்,
நாய்களை அதன் இருப்பிடத்திலேயே விட்டு விடுங்கள் அப்போதுதான் அனைவருக்கும் அது நன்றாக இருக்கும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments