தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் நகைகடன் பெறுவதற்கும், அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கும் நகைக்கான ரசீது கட்டாயம் என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவசாயிகளுக்கான வங்கிகடன் 2 லட்சமாக உயர்த்தியபிறகும் விவசாயிகளுக்கு கடன்வழங்க வங்கிகள் மறுத்துவரும் நிலையில், விவசாயத்தை மற்றும் விவசாயிகளை அழிக்கும் வகையில் கொண்டுவந்த இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பபெற வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக ரிசர்வ்

வங்கியின் மத்திய அரசும் செயல்படுவதை கண்டித்தும் இன்றையதினம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் எஸ்பிஐ வங்கி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும், சாலையில் அமர்ந்தும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதேநேரம் விவசாயிகளின் போராட்டத்தின் எதிரொலியாக, எஸ்பிஐ வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் விவசாயிகளுக்கு எந்தவித பிணையமும் கேட்காமல், ஜாமீன்தாரர்கள் இல்லாமல் 2 லட்சம் வழங்க எஸ்பிஐ வங்கியின் தலைமை மேலாளர் அறிவிப்பு விடுத்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றதுடன் இது தொடர்பான நகலையும் ஆட்சியரை சந்தித்து அளித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments