திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான வைணவம் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சி நடைபெற உள்ளது.இப்பயிற்சிக்கான தகுதி குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்து மத வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
01.07.2025 நிலவரப்படி 14 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு ஆண்டு பயிற்சி காலம்
சலுகைகள்: ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் திருக்கோயில் சார்பில் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2025 மாலை 5:00 மணி வரை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்,
ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி – 620006.
மேலும் தகவல்களுக்கு 94433 98769, 84288 25526 தொடர்பு கொள்ளவும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments