கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் முதல்வர் பழனிச்சாமியின் நண்பர் பினாமி என்று அழைக்கப்படும் இளங்கோவன் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி முசிறி எம்.புதுப்பட்டியில் உள்ள எம்.ஐ.டி கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, விவசாய கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

கட்டிடங்கள் மட்டும் தோராயமாக 50 கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. கல்லூரியின் வளாகம் அதிலுள்ள உள்ள கட்டிடங்கள் இவை அனைத்தும் 500 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இக்கல்லூரி சுவாமி ஐயப்பன் எஜுகேஷனல் டிரஸ்ட் பேரில் இயங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கல்லூரி கட்டிடங்கள் அனைத்தும் 2017 மற்றும் 19, 20, 21 ஆண்டுகளில் கட்டப்பட்டவை.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments