வாகன விற்பனை நிறுவனங்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனங்கள் என பல துறைகளிடமிருந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீபாவளி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரினை அடுத்து திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்று (29.10.2021) மாலை சோதனையில் ஈடுபட்டனர்.
இரண்டரை மணி நேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத சுமார் 60 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் தீபாவளி இனாம் கேட்பதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று திருச்சி வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments