டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம்
பாபர் பள்ளி இடித்த 33 ஆண்டுகள் அநீதி அரங்கேறிய தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில் அரசமைப்பு சட்ட முகவுரையை கையில் ஏந்தி மாபெரும் மக்கள் திரள் ஆர்பாட்டம் தெற்கு மாவட்ட தலைவர் கே.தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் Er.A.முகம்மது சித்திக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர்.ஏ.கே கரீம் MBA.,LLB., அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார்.
மேலும்,விமன் இந்தியா மூவ் மெண்ட் மாநில செயலாளர் ஆலிமா. M.மெஹராஜ் பானு, திருச்சி மாநகர ஜமாத்துல் உலமா சபை செயலாளர் இமாம் M.அப்துல் ரஹீம் மன்பஈ, மற்றும் கத்தோலிக்க பொது நிலையினர் பேரவை தலைவர் ஆசிரியர் I.வேளாங்கண்ணி ஆகியோர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் திருவரம்பூர் தொகுதி தலைவர் Er.I. ஷேக் முகமது மற்றும் மேற்கு தொகுதி தலைவர் D.சையது முஸ்தபா, ஶ்ரீரங்கம் தொகுதி துணைத் தலைவர் திப்பு சுல்தான், ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் SDTU மாநில செயலாளர் K.முகம்மது ரபீக், மாவட்ட துணைத் தலைவர் Y. ரஹீம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி, மாவட்ட செயலாளர்கள் மதர்.Y.ஜமால் முஹம்மது, Er.N.G.சதாம் உசேன்,
மாவட்ட பொருளாளர் S.பிச்சை கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S. அப்துல் காதர் (பாபு) B.com.,DCA., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
ஏர்போர்ட்.மஜீத், சிராஜ், திருச்சி.
S. ஜாகீர் உசேன், K.முஹம்மது சலீம், ஸ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசர், மணப்பாறை தொகுதி தலைவர் உமர், மாவட்ட ஊடக அணி தலைவர் உபைதுர் ரஹ்மான், SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தபா,மாவட்ட செயலாளர் சர்க்கரை மீரான், கல்வியாளர் அணி மாவட்ட தலைவர் S.S. ரஹ்மத்துல்லா, சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் KMS.ஹக்கீம், மருத்துவ அணி தலைவர் Dr.இக்பால்,bவிமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா, வர்த்தக அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன், மற்றும் நிர்வாகிகள்,தொகுதி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பெருந்திரளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக கிழக்கு தொகுதி தலைவர் I.சபியுல்லா B.com
அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments