Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கஞ்சா, அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் அமல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே கடந்த 12.11.2025-ம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மாரியப்பன் 25/25 த.பெ பிச்சைமணி, வடக்கிபட்டி, கம்பம், தேனி மாவட்டம் (Manapparai PS, Rowdy HS.No.22/25, Category C) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இவர் மீது மண்பாறை காவல்நிலைய குற்ற எண். 751/25, U/s 8(c) r/w 20(b)(ii)(C) of NDPS Act-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய காட்டூர் பகுதியில் கடந்த 15.11.2025-ம் தேதி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சரண் (எ) சரண்ராஜ் 31/25 த.பெ முகுந்தன், புதுகாட்டூர், ராம்ஜிநகர் (Ramji Nagar PS, Rowdy HS.No.4/22, Category C) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.135 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இவர் மீது ராம்ஜிநகர் காவல்நிலைய குற்ற எண். 472/25, U/s 8(c) r/w 20(b)(ii)(B) of NDPS Act.-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், சோமரசம்பேட்டை காவல் நிலைய குற்ற எண். 609/25, U/s 191(2), 191(3), 296(b), 115(2), 324(4), 351(3), 329(4) BNS r/w 4 of TNPWH Act.-வழக்கின் வாதியை அடித்தும், வாதியின் சிகிச்சை மையத்தின் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக எதிரி ஹரிஹரன் (எ) பேய் ஹரி 22/25 த.பெ மணி, அன்னை தெரசா காலனி, கீழ கல்நாயக்கர் தெரு, உறையூர், திருச்சி, Now at: மலையப்ப நகர், வெள்ளி திருமுதம், ஸ்ரீரங்கம் (Somarasampettai PS, Rowdy HS.No.355/25, Category C) என்பவரை 20.11.2025-ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி குற்ற வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில் மேற்படி எதிரிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று 14.12.2025-ஆம் தேதி சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போது வரை மொத்தம் 113 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *