Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம்

No image available

கணேசன்  என்பவரிடம் விமல் என்பவர் 01.06.2025-ம் தேதி கத்தியை காட்டி ரூ.750/- பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக  விமல் மீது துவாக்குடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது.

விக்னேஷ் (எ) விக்கி என்பவர் பழனி சாமி என்பவரிடம்  என்பவரிடம் கடந்த 27.05.2025-ம் தேதி கத்தியை காட்டி பணம் ரூ.2000 மற்றும் Vivo Touch Phone 1 ஆகியவற்றை பறித்து சென்றதாக  வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய  விமல் மற்றும் விக்னேஷ் ஆகியோர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாப, அவர்கள் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்

அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று 24.06.2025-ஆம் தேதி சிறையில் உள்ள குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் ஆணை சார்வு செய்யப்பட்டது 

மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 48 தடுப்பு காவல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *