திருச்சி தில்லை நகர் 11வது குறுக்கு தெருவில் ஜெயராஜ் அப்பார்ட்மெண்ட் உள்ளது. இங்கு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு வசிப்பவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.
இதனை உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் இருந்து பெண் ஒருவர் டெலிவரி செய்வதற்காக அப்பார்ட்மெண்டிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வயதான காவலாளி தகாத வார்த்தைகளில் திட்டியும், “உள்ளே எதுக்கு வருகிறாய்” என அடிக்கவும் முற்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பெண் மற்ற உணவு டெலிவரி செய்பவர்களிடம் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார்.
Advertisement
தனியார் நிறுவனத்தை சேர்ந்த உணவு டெலிவரி செய்பவர்கள் அப்பார்ட்மெண்ட் வாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது குறித்து புகார் தெரிவிப்பதாகவும் கூறினார். உணவுச் டெலிவரி செய்ய சென்ற பெண்ணை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments