திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றுகளின் ஒளிநகலுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
அரசு குழந்தைகள் இல்லத்திற்கு 1 பணியிடம் தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 108 நாட்களுக்கு மிகாமல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- மட்டும் வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட https://tiruchirappalli.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கண்காணிப்பாளர், அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் ரோடு, மாத்தூர்(இ), திருச்சி- 622515 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.12.2025 மாலை 05:00 மணிக்குள் வந்த சேருமாறு அனுப்பி வைத்திட தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேற்கூறிய காலவரையறை பின்பு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
ஆற்றுப்படுத்துநர் பணிக்கு 1 பணியிடம் உள்ளது விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 22.12.2025, விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி
கண்காணிப்பாளர் (பொ).
அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லம், ஆவூர் ரோடு, மாத்தூர் (இ), திருச்சி -622 515, விண்ணப்பதாரரின் தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம், ஊதிய விவரம்
மதிப்பூதியம் ஒரு அமர்விற்கு
ரூ.1000/- வீதம் அதிகபட்சமாக ஒரு நபருக்கு மாதம் 9 அமர்வுகள் மட்டும்.
மேலும் விபரங்களுக்கு Ph:04339-250074, CUG : 6369104191 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments