புதிய விரிவான மினிப் பேருந்து 2024 திட்டம் தொடர்பாக தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 66.33. உள் (போக்குவரத்து -1). துறை. நாள்: 23.01.2025ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு திருச்சி மாவட்டத்தில் 157 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு 13.02.2025, 17.02.2025 மற்றும் 18.02.2025 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் மினிப் பேருந்துகளை இயக்க விரும்பும் பொதுமக்கள் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் பெறப்படும் பட்சத்தில் குலுக்கள் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இப்பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு, பொதுமக்கள் நேரடியாக சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments