Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சட்டவிரோதமான கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது மற்றும் விழிப்புணர்வு

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் “போதை பொருட்களுக்கு எதிரான இயக்கம்” என்ற திட்டத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.செல்வநாகரத்தினம், இ.க.ப., அவர்களின் உத்தரவின் பெயரில் அமல்படுத்தப்பட்டு திருவெறும்பூர் மற்றும் துறையூர் மதுவிலக்கு அமலாக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

இத்திட்டத்தினால் திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலகுறைவு மற்றும் குடும்ப பொருளாதார சரிவு போன்றவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கஞ்சா விற்பவர்கள், கடத்துபவர்கள் மற்றும் பதுக்கி வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பதை பற்றி அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்படி திட்டத்தினால் நடப்பாண்டில் (2025) மொத்தம் 231 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு பொது இடங்களிலும் நடத்தப்பட்டதில் 18,308 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கடந்த 26.06.2025 ம் தேதி உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தன்று தனலட்சுமி நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 100 T-shirt மற்றும் 200 badge-ம் வழங்கப்பட்டதுடன். அக்கல்லூரி மாணவ மாணவிகளின் மூலம் பொது மக்களுக்கு 2000 துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் போதை பொருள் சம்மந்தமான புகார் அளிக்க தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் அவர்களின் வழிகாட்டலின் பேரில் Drug Free TN App-ன் மூலம் புகார் அளிக்கலாம் என்ற தகவலும் பொது மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு வந்ததன் பெயரில் திருச்சி மாவட்டத்தில் Drug Free TN App ன் மூலம் 45 புகார் பெறப்பட்டு உடனக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நடைபாண்டில் (2025) போதை வஸ்துக்கள் விற்பனை செய்யபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது 896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 939 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து 5005.6 கிலோ கிராம் புகையிலை பொருட்களும், வழக்கில் தொடர்புடைய 12 இரண்டு சக்கர வாகனம் மற்றும் 8 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் 5 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டில் கஞ்சா சம்பந்தமான 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 246 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், அவர்களிடமிருந்து 102.524 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 25 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 17 நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள திருச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 50.010 கிலோ கஞ்சாவை அழிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு 04.07.2025 ம் தேதி பெறப்பட்டுள்ளது மீதமுள்ள கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபடுபவர்கள், கடத்துபவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக மது அருந்துபவர்கள் மீது நடப்பு ஆண்டில் 5940 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் 6015 எதிரிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3541.850 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டும், வழக்கில் தொடர்புடைய 13 இருசக்கர வாகனங்களும், ஒரு நான்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்படி சட்ட விரோத செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களை கடந்த 29.07.2025-ம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்பட்டதில் ஏலத்தொகை ரூ.5,84,600/-ம், வரி தொகை ரூ.78,768/-ம் கிடைக்கப்பட்டதை அரசுக்கு ஆதாயமாக்கப்பட்டுள்ளது.

இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க 8939146100 என்ற 24 மணிநேரமும் செயல்படும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண்ணை அழைக்கலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *