திருச்சி அம்பிகாபுரம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வராநகர், அல்லிதெரு, ஆலத்தூர், மகா லட்சுமிநகர், கல்கண்டார்கோட்டை, காருண்யாநகர், சோமசுந்தரம்நகர், மூகாம்பிகைநகர், மகாசக்திநகர், கீழக்குறிச்சி, முடுக்குப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (15ம் தேதி) காலை 11 முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

இதே போல் கல்கண்டார்கோட்டை ரோடு, ஆண்டாள்நகர், ராஜப்பாநகர், காமராஜர்நகர், ரயில்நகர், கீழஅம்பிகாபுரம், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் மதியம் 3 முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (15ம் தேதி) காலை 09:00 மணி முதல் 12:00 மணி வரை போலீஸ் காலனி, பர்மா காலனி, காவேரி நகர், அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், டிஎன்யுடிபி, என்பிஎஸ் காலனி, கும்பக்குடி, வேலாயுதக்குடி, பட்டவெளி, சிட்கோ ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. குண்டூர், அயன்புத்துார், அய்யம்பட்டி, திருவளர்ச்சிப்பட்டி, குடித்தெரு,

குளவாய்ப்பட்டி, எம்ஐஇடி கல்லுலூரி ஆகிய பகுதிகளில் மதியம் 02:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (15.06.2924) (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெறஉள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு,வெங்கங்குடி, வ.உ.சி.நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், கரியமாணிக்கம், எதுமலை தெற்கு, பாலையூர், வலையூர், கன்னியாகுடி, ஸ்ரீபெரும்புதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர் நகர், கூத்தூர், நொச்சியம், பலூர், பாச்சூர், திருவாசி, குமரக்குடி,

அழகியமணவாளம், திருவரங்கபட்டி, கோவத்தக்குடி, பனமங்கலம், சாலப்பட்டி, எடையபட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆய்குடி ஆகிய பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது. என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments