திருச்சி அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (14.06.2022) 11KV வயலூர் பீடரில் தவிர்க்க முடியாத அவசரகால பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வயலூர் பீட்டரில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான
அதவத்தூர், வயலூர், கொத்தட்டை, குழுமணி, கீழவயலூர், மேலவயலூர், பேரூர், மேலப்பட்டி, கோப்பு, அயிலாப் பேட்டை, சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர், சுப்பையாபுரம், முள்ளிக்கரும்பூர் ஆகிய பகுதிகளுக்கு நாளை (14.06.2022) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO







Comments