திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கலெக்டர் வெல் – அய்யாளம்மன் படித்துறையில் மின்சார வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மின் விநியோகம் இருக்காது. எனவே, மண்டலம் – 3ல் திருவெறும்பூர் மற்றும் காட்டூர் பகுதியில் உள்ள வார்டு எண் : 38, 39, 40, 41 மற்றும் 42ல்
அமைந்துள்ள பாரி நகர், புகழ் நகர், கணேஷ் நகர், காவேரி நகர், சந்தோஷ் நகர், பழைய எல்லைக்கடி, திருவெறும்பூர் ஒன்றிய காலணி மற்றும் ஆலத்தூர் ஆகிய நீர்த் தேக்க தொட்டிகளுக்கு (03.12.2022) அன்று குடிநீர் விநியோகம் நடைபெறாது. மறுநாள் (04.12.2022) அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments