திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு 3 நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாய் குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோணக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகச் செல்கிறது. குழாயின் ஏற்ப்பட்ட பழுதினை சரி செய்திடும் பொருட்டு மாநகராட்சியால் 06.08.2022 அன்று பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால் கீழ்க்கண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள்
புத்தூர் பழைய மற்றும் புதிய, உறையூர் பழைய மற்றும் புதிய பாரதிநகர், மங்கள நகர், பாத்திமா நகர், சிவா நகர், செல்வா நகர் மற்றும் ஆனந்தம் நகர் ஆகிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு நாளை 07.08.2022 ஒரு தினங்களுக்கு குடிநீர் வீநியோகம் இருக்காது.
08.08.2022 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments