அண்ணா மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே உடற்தகுதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கத்தில் செப்டம்பர் 28, 2025 அன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டி, இளைஞர்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு ஒரு முக்கிய முன்னெடுப்பாகும்.
வரம்புஆண்கள்பெண்கள்1.17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்8 கி.மீ.5 கி.மீ.2.25 வயதுக்கு மேற்பட்டவர்கள்10 கி.மீ.5 கி.மீ.
போட்டிகள் அனைத்தும் காலை 6:30 மணிக்கு துவங்கப்படும்.
வெற்றி பெறும் முதல் 10 இடங்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பரிசுத் தொகை NEFT மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
வ.எண்பரிசு விவரம்பரிசுத் தொகை
முதல் பரிசுரூ.5000.00,இரண்டாம் பரிசுரூ.3000.00,மூன்றாம் பரிசுரூ.2000.00,4 முதல் 10 இடங்கள் வரை (7 நபர்களுக்கு)ரூ.1000.00
போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது ஆதார் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் நகல்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
இந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பரிசுத் தொகை வங்கி கணக்கில் வழங்கப்படுவதால், பங்கேற்பாளர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் நகலுடன் வர வேண்டும்.
போட்டியாளர்கள் அனைவரும் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அண்ணா விளையாட்டரங்கத்திற்கு வருகைதர வேண்டும்.
இந்த போட்டி குறித்து மேலும் விவரங்கள் அறிய, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி தொலைபேசி எண்: 0431-2420685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த ஓட்டப் போட்டியில் பெருமளவில் கலந்துகொண்டு, ஆரோக்கியமான வாழ்விற்கு ஊக்கமளிக்குமாறு பொதுமக்களும், இளைஞர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments