அரியாறு வடிகால் கூட்டத்திற்குட்பட்ட வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரப்படாமல் ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் முழுமையாக செலவிடப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டித்தும், மாவட்ட ஆட்சியர் இதனை ஆய்வு செய்து அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தியும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்படும் அணுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது திமுக அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர், அதேநேரம் விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் பங்கேற்காமல் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்வதுடன், விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு செய்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் கூட்டுறவுசங்கங்களில் தாமதமின்றி பயிர்கடன் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும், அதேபோன்று உரத்தட்டுப்பாடு நிலவுவதுடன் அடிக்கடி மும்மூனை மின்சாரம் தடைபடுவதால் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளதாகவும், அதேபோன்று வரிசை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6000 நடவு மானியம் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments