Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

வேட்பு மனு தாக்கல் செய்தார் அருண் நேரு

பெரம்பலூர் எம்.பி., தொகுதிக்கு திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு போட்டியிடுகிறார். இன்று மதியம் 12 மணி அளவில் அதற்கான வேட்பு தாக்கல், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராசா தலைமையிலும்,   தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, திருச்சி திமுக வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ந.தியாகராஜன்,(எம்.எல்.ஏ.) பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் ஆகியோரது முன்னிலையிலும், வேட்பாளர்  அருண்நேரு, பெரம்பலூர் எம்.பி தொகுதி தேர்தல் அலுவலர் கற்பகத்திடம் தாக்கல் செய்தார்.

முன்னதாக திமுக அலுவகலத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை திரளாக திமுகவினர் வந்தனர். எம்.எல்.ஏ கதிரவன், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார்,  மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, ம.இராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை,

பேரூர் செயலாளர்கள் மு.வெங்கடேசன், செல்வலெட்சுமி சேகர், ஆர்.இரவிச்சந்திரன், ஏ.எஸ்.ஜாகிர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வி.சி.ரவி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராசு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.இராசா, தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி,

மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன்,இரா.அருண், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், தலைமை கழக பேச்சாளர் எசனை. ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை,க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, துணை சேர்மன்கள் சாந்தாதேவி குமார், எம்.ரெங்கராஜ், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ், பாக்கியலட்சுமி செங்குட்டுவன், வள்ளியம்மை ரவிச்சந்திரன்,

பேரூராட்சி துணை தலைவர்கள் கீதா துரைராஜ், சரண்யா குமரன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் டி.கே.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் வேப்பூர் சேர்மன் அழகு.நீலமேகம், பட்டுச்செல்வி ராஜேந்திரன், உடையார் டீ ஸ்டால் முத்துக்குமார், மேலும், பெரம்பலூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, குளித்தலை பகுதியை சேர்ந்த ஏராளமான திமுகவினர் பெரம்பலூரில் உள்ள ஆ.ராசா அலுவலகத்தில் திரளாக வந்திருந்து அருண் நேரு சால்வை அணித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.செளந்தரபாண்டியன், இரா.மாணிக்கம், எம்.பிரபாகரன், ஸ்டாலின்குமார், சீ.கதிரவன், மற்றும்  காங்கிரஸ், ம.தி.மு.க., விசிக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித் தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *