ஆஸ்ட்ராஸ் தடகள விளையாட்டு மையம் , கத்தார் அமைப்பினர் நடத்திய ஆசியன் ஓபன் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
சிங்கிள் ஸ்டிக் தனிநபர் போர் சண்டை சிலம்ப போட்டியில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தமிழ்நாடு சார்பாக துறையூரை சேர்ந்த ராகவன் (10) என்ற சிறுவனும், கரிகாலியைச் சேர்ந்த ருத்திகா ஹரிணி (9) என்ற சிறுமியும் துறையூரை சேர்ந்த பயிற்சியாளர் சுப்ரமணியனுடன் பங்கேற்றனர்.
கத்தார் ஆஸ்பியர் டோம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒரு நாள் ஆசியன் ஓப்பன் சாம்பியன்ஷிப் சிலம்பப் போட்டியில் பெண்கள் பிரிவில் ருத்திகாஹரிணி தங்கப் பதக்கத்தையும், ஆண்கள் பிரிவில் ராகவன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments