திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நிதித்துறையில் முனைவர் பட்டம் பெறுவதற்காக இரண்டாமாண்டு படித்து வந்துள்ளார் சிபானி கோகை.
இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.நேற்று (23.05.2025) காலை 12:00 மணிக்கு நண்பர்களுடன் பேசிவிட்டு விடுதியில் உள்ள அவரது அறைக்கு சென்றுள்ளார் என்றும், பிறகு மதியம் சாப்பிடக்கூப்பிடும் போது கதவு திறக்காததால், விடுதி பொறுப்பாளரை அழைத்து வந்து மாற்று சாவி போட்டு திறந்து பார்த்தபோது அவரது துப்பட்டாவால் ஜன்னல்
கம்பியில் தூக்குப்போட்டு இறந்தநிலையில் இருந்துள்ளார். தகவலறிந்து நவல்பட்டு போலீசார் சம்பவ இடம் சென்றும், இறப்பு குறித்து விசாரணை செய்தும், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.இறந்தவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்தவரின் தந்தை அசாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழகம் லிமிடெட் (BVFCL)-ல் பணிபுரிந்து
ஓய்வு பெற்றுள்ளார்.இறந்தவர் சமீப காலமாக மனஅழுத்தத்திற்காக நிவாரணம் பெற்று வந்துள்ளார். அதற்காக தொடர்ச்சியாக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். அவரது தந்தையில் சகோதரர்கள் சமீப காலத்திற்கு முன்னர் இறந்துள்ளனர். அது முதல் மனஅழுத்தத்தில் இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் சாதாரணமாகவே பதஷ்டத்துடன் காணப்படுவதாகவும்,
அவ்வப்போது மயங்கி விழுந்தும் வந்துள்ளார்.கடைசியாக பாடம் சம்பந்தமாக மார்க் குறைவாக எடுத்துள்ளதாகவும், அதுமுதல் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் என்றும், இதனால் மேற்படி நிகழ்வு நடந்திருக்கக்கூடும் என்று நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.இதுகுறித்து நவல்பட்டு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments