திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்கு சொந்தமான 58 சென்ட் பரப்பளவு கொண்ட நிலம் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் திருவானைக் கோயில் அருகே உள்ளது. இந்த நிலத்தை சிலர் இரவோடு இரவாக ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர்.

இதையடுத்து உடனடியாக இன்று அந்த நிலத்தை கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையிலும் உதவி ஆணையர் கு. கந்தசாமி, மேலாளர் உமா, கோயில் வழக்கறிஞர் சீனிவாசன் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூபாய் 10 கோடியாகும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments