இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தடய அறிவியல் துறை
சார்பில் சங்கக் கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக
ஸ்பை ஷாட் (உளவு சாட்) புலனாய்வு நிறுவனம் மற்றும் தடய அறிவியல் பயிற்சி அகாடமியின் நிறுவனர் டாக்டர்.டி.கே. சுகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் துப்பறியும் திறன், புலனாய்வு துறை, தடய அறிவியல் துறையின் செயல்பாடுகள் குறித்தும், தடய அறிவியல் துறை சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய தொண்டுகள் குறித்தும், சேவை. மனப்பான்மை குறித்தும், போட்டி தேர்வுகளுக்கு எப்படி தயார் செய்வது குறித்தும் மாணவர்களுக்கு புரியும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சி
மாணவர்களுக்கு மிகவும்
பயனுள்ள வகையில் அமைந்தது. இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் *பொறியாளர் க. இராஜசேகரன்* தலைமை வகித்தார். இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் பதிவாளர் முனைவர் எம். அனுசுயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
இந்திரா கணேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ச. இரமா பிரபா அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தடய அறிவியல் துறை
மூன்றாம் ஆண்டு மாணவி வர்சினி தலைவராகவும், முதலாம் ஆண்டு மாணவி பிரசித்தா இளஞ்செழியன்
செயலராகவும், மணிகண்டன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தடய அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் இரா. தேன்மொழி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இரண்டாம் ஆண்டு மாணவி புவனேஸ்வரி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
தடய அறிவியல் துறை
மூன்றாம் ஆண்டு மாணவி புவனேஸ்வரி
நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments